Friday, March 11, 2011

கொங்கதேச பட்டக்காரர்கள்:MyFreeCopyright.com Registered & Protected

சேர கொங்க தேசத்தின் பாரம்பரிய விற்கொடி


                  சேரர் செப்புக்காசுகள் (மங்கல வாழ்த்தில் வரும் கருவூர் பணம்)


      
கொங்க தேசத்தை ஆண்ட பக்த சிகாமணிகளான சேர மன்னர்கள்:

                                                சேரமான் பெருமாள் நாயனார்                                                சேரமான் கயிலை சென்றது
8.கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
-வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்

                                                            குலசேகர ஆழ்வார்675 அங்கை-ஆழி அரங்கன் அடியிணை 

     தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க் 

     கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல் 

     இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
- குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் நாலாயிர திவ்ய பிரபந்தம்.


  குலசேகரர்
வள்ளவாய் நெகிழத் துளிக்கும் பசுந்தேறல்
       மலர்மங்கை திகழ் வஞ்சியும்
      வளமை தரு குடநாடும் வான் பொருநையும்
        கொல்லிவரையும் உரிமைச் சேரர்கோன்
புள்ளவா வுறு நீல மாலிகை கிடந்த
       புயபூதரன் சூலசே கரன்
      பொருசிலையை நெடிய வடவரை மிசை
       பொறித்த வண் புகழ் வேந்த னினிது காக்க,
அள்ளல் வாய்ப் பழனத் தடந்தொறுஞ்
       சுரிசங்கம் அகடுளைந் தின்ற முத்தும்
      அம்பொற் பசும்பாளை தயைவிழ்க் கும்
       கமுகின் அணிமுத்தும் நிலவுங் காலக்
கள்ளரு நறுமலர்க் குமுதம் விரி பேரை
       வரு கருணா கரக்குரி சிலைக்
      கடவுளைக் குலநாத னைப் புகழ்ந் தேத்துமென்
       கவிதையின் சொல்தழை யவே."கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும் 
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்
வஞ்சிநகர் நகர் நாலும் வளமையால் ஆண்டருளும் 
கஞ்சமலர்க் கையுடையோன் காண்."
                              -சேரர் மீது வெண்பா

சேரனுக்கு முடிசூட்டுதல்

நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள் 
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம் 
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு 
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.


 கொங்கு மலை நாடு - கொங்கு நாடு


கொங்கதேசம் எல்லைகளுடன்:


குளிர்ந்தநதி பன்னிரெண்டு: 
 1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), 
 2. காஞ்சி (நொய்யல்), 
 3. வானி (வவ்வானி, பவானி), 
 4. பொன்னி (காவேரி), 
 5. சண்முகநதி, 
 6. குடவனாறு (கொடவனாறு), 
 7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), 
 8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
 9. மீன்கொல்லிநதி
 10. சரபங்கநதி
 11. உப்பாறு
 12. பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்

 1. கருவூர் [கரூர்], 
 2. வெஞ்சமாக்கூடல், 
 3. திருச்செங்கோடு, 
 4. திருநணா [வவ்வானி - பவானி], 
 5. கொடுமுடி,
 6.  திருமுருகன்பூண்டி, 
 7. திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு: 

 1. கருவூர்,
 2.  தாராபுரம், 
 3. மூலனூர், 
 4. விளங்கில்

காப்புரிமை செய்யப்பட்டது. MyFreeCopyright.com Registered & Protected


பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அன்னியர்களால் அன்னியமுறையில் அமைக்கப்பட்ட இன்றைய சர்க்கார் AC அறையில் அமர்ந்துகொண்டு தாந்தோன்றித்தனமாக இவற்றைப் பிரித்திருப்பினும், இயற்கை, பண்பாடு, வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுப்பிரிவுகள் என்றும் நமது வாழ்க்கையின் வழியாக உள்ளன. நிலையான அமைதியான வாழ்வு (இதனையே சனாதன தர்மம் என்றும் sustainable living என்றும் ஆழைத்து வந்துள்ளோம்) இருந்திட இம்முறை பல்லாயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்குப்பின் உருவானதாகும். நீர் நிலைகள் பராமரிப்பு (அணைக்கட்டுஉதாரணம் நொய்யல், அமராவதி, பவானி, திருமணிமுத்தாறு, காவேரி அணைகள் போன்றவை, ஏரிகள்உதாரணம் பூந்துறை, வெள்ளோடு, ந்சியனூர், எழுமாத்தூர் ஏரிகள் முதலியவை, குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள்காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, இருட்டணை முதலானவை, கிணறுகள், தீர்த்தங்கள், தெப்பக்குளங்கள்ஈரோடு, பெருந்துறை தெப்பக்குளங்கள் போன்றவை - , தடாகங்கள்) முதலியவை , பண்பாட்டினைப் பாதுகாத்தல் (தர்மங்கள்,சமுதாய கூட்டுக்குடும்ப அமைப்புகள், கலைகள், இலக்கியங்கள், கோயில், மடம், சத்திரங்களைப் பாதுகாத்தல், மரங்கள் நடுதல், கால்நடைகள், நாட்டு வித்துக்கள் தயார் செய்தல்) - .

கொங்கதேசத்தினை 24 நாடுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கும் பிராமணர்களிலிருந்து சாம்புவன் வரை 18 குடிகள் உள்ளனர். ஒவ்வொரு குடிக்கும் தனித்தனியே ஊர்த்தலைவர்கள் முதல் பட்டக்காரர்கள் வரை உண்டு. இவர்கள் தத்தமாது குடிகளைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். இதற்கு ஜாதிப்பஞ்சாயம், சமிதி அல்லது ஆயம் என்று பெயர். இவர்களுக்கு மேல் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரிய வீட்டுக்காரர், நாட்டுக்கவுண்டர், பட்டக்காரர், நாட்டார், காராளர், எஜமானர் என்று அழைக்கப்படும் நாட்டுப் பட்டக்காரர்கள் இருந்து வந்துள்ளனர். இப்பெயர்கள் அனைத்தும் ஒரே பொருளையே குறிக்கின்றன. இவர்கள் சபை (மன்றம்) நடத்தி வந்தனர். இதனால் மன்றாடி (மன்றம் + ஆடி) என்று பெயர் பெற்றனர். இவர்கள் நாட்டு சபைக்கும், அனைத்து ஆயங்களுக்கும் தலைவர்கள். இது நிர்வாக அமைப்பாகும். துருக்கர் காலத்தில் இதனை நேரடியாக அழிக்க முயன்று தோற்றனர். பிறகு கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் இதனை அழித்தாலோ, கைபற்றினாலோதான் கொள்ளையடிக்க முடியும் என்பதனைப் புரிந்துகொண்டு இன்று வரையில் வெவ்வேறு வழிகளில் சுதேசி ஆட்சிமுறைகளை இன்றுவரை அரித்தெடுத்து வருகின்றனர்.

நாட்டார்கள் புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, தீயன பேசாதிருத்தல், அறுபத்திநான்கு கலைஞத்துவம், பெண்களுக்கு சம உரிமைகள் (குதிரையேறுதல், மன்றம்சபை நாட்டாண்மை முதலியவை), குருபக்தி, தெய்வபக்தி போன்ற தனித்தன்மையுடன் உள்ளனர்.

குறிப்பு: இது துருக்கர்களால் ஏற்படுத்தப்பட்ட ஜமீன்தார், தாசில்தார், மன்சப்தார், தாலுக்தார், இனாம்தார் முறைகளல்ல,
விஜயநகரத்தாரால் ஏற்படுத்தப்பட்ட பாளையக்காரர் முறையுமல்ல,
வெள்ளையர்காளால் மாற்றியமைக்கப்பட்ட பாளைய பட்டக்காரர் முறையுமல்ல (feudal lords).
ஆதியில் சேரமான் ஏற்படுத்திய சங்ககால முறை. கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.

 இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர். 


நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்:
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணியிலேயே வாழ்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே முக்கியமாக இருந்தன. பணம், செல்வாக்கினை மட்டுமே மணதில் கொண்டு தற்கால திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு. 


மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.


விவரங்களுக்கு: 91 - 424 - 2274700


நாட்டார்கள் குணங்கள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவத் மரபு:


தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:
பூந்துறை நாட்டார்:
 1. பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
 2. வெள்ளோடு பயிர கோத்திரம்
 3. வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
 4. நசியனூர் கன்ன கோத்திரம்
 5. நசியனூர் பூச்சந்தை கோத்திரம் 
 6. நசியனூர் செம்ப கோத்திரம்
 7. நசியனூர்  கூரை கோத்திரம் 
 8. எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்
தென்கரை நாட்டார்:
 1. கொத்தனூர் பெரிய கோத்திரம்
 2. மூலனூர் பூச கோத்திரம்
காங்கய நாட்டார்:
 1. காங்கயம் செங்கண்ண கோத்திரம்
 2. காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
 3. ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)
பொங்கலூர் நாட்டார்:
 1. கொடுவாய் ஓதாள கோத்திரம்
 2. பொங்கலூர் பொன்ன கோத்திரம்  
 3. புத்தரச்சல் குழாய கோத்திரம் 
 4. உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் 
வையாபுரி நாட்டார்:
 1. பழனி ஈஞ்ச கோத்திரம்
மண நாட்டார்:
 1. கூடலூர் வெண்டுவ கோத்திரம்
தலைய நாட்டார்:
 1. கன்னிவாடி கன்ன கோத்திரம்
கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:
 1. வாங்கல் பெருங்குடி கோத்திரம்
 2. மோகனூர் மணிய கோத்திரம்
தட்டய நாட்டார்:
 1. புலியூர் பெருங்குடி கோத்திரம்
அரைய நாட்டார்:
 1. தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்
அண்ட நாட்டார்:
 1. பொருளூர் பூச கோத்திரம்
காவிடிக்கா நாட்டார்:
 1. ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்
காஞ்சிகோயில் நாட்டார்:
 1. காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
 2. காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
 3. காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்

நல்லுருக்கா நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:
 1. கீரனூர் பவள கோத்திரம்
தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:

கீழக்கரை பூந்துறை நாட்டார்:
 1. மோரூர் கன்ன கோத்திரம்
 2. மொளசி கன்ன கோத்திரம்
 3. பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்  
 4. ஏழூர் பண்ணை கோத்திரம் 
 5. மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்

ராசிபுர நாடு:

6. ராசிபுரம் விழிய கோத்திரம்
7. சேல நாடு: வெண்ணந்தூர் காடை (கன்னன் என்று தவறாக குறிப்பிடப்படுகிறது) கோத்திரம்

8. கலியாணி பண்ணை கோத்திரம் (கலியாணி போன்காளியம்மன்) - இந்நாட்டார் நாடு போயினும் குலகுரு கணக்கில் "கலியாணி ஆண்ட கவுண்டர்கள்" என்றும் வெள்ளையர் கலியாணியில் எட்டாவதாக ஒரு நாடு இருந்ததாகவும் சொல்கின்றனர்.

9.வீரபாண்டி மணிய கோத்திரம்
10.திண்டமங்கலம் ஆந்தை கோத்திரம் (விழிய என்று தவறாக குறிப்பிடப்படுகிறது)

நாட்டார்கள் பற்றி சேலம் கேஜட்டியரில்: http://archive.org/stream/p1salemrich01richuoft#page/144/mode/2up

நாட்டார் பரியம் தற்பொழுது:  108  ரூபாய், காணியாளர்: 471/2 ரூபாய் கொங்கதேசத்தின் இருபத்திநாலு நாடுகள்:

கொங்கு மண்டல ஊர்த்தொகை:

கொங்கதேசமான சேரதேசம் தட்பவெப்ப - இயற்கை அரண் - ஜனத்திரள் அடிப்படையில் (socio - agroeconomic) நாடுகளாக பிரிந்துள்ளது. இது இயற்கையான  அமைப்பாகும். சர்க்கார் ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஒன்றரை அணா மேப் வைத்துக் கொண்டு இந்நாட்டுப்பிரிவுகளை தாறுமாறாகப் பிரித்துள்ளது சாபக்கேடாகும்.


கொங்கதேசம்  24 நாடுகள் சித்திரம்
(க்ளிக் செய்யவும்)


1. பூந்துறை நாடு
2. தென்கரை நாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10.வாழவந்தி நாடு
11. தட்டய நாடு
12. பூவாணிய நாடு
13. அரைய நாடு
14. ஒடுவங்க நாடு
15. வடகரை நாடு
16. கிழங்கு நாடு
17. அண்ட நாடு
18. வெங்கால நாடு
19. காவடிக்கா நாடு
20. ஆனைமலை நாடு
21. ராசிபுர நாடு
22. காஞ்சிகோயில் நாடு
23. நல்லுருக்கா நாடு
24. குறுப்பு நாடு
A - தாடிக்கொம்பு  பாளையப்பட்டுகள் (பன்றிமலை மண்டிலம்)
கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)


கொங்கதேசம்:
 ராயர்அரசர் - சேரமான்
|
|
நான்கு ஆறு நாடுகள் (4 x 6 = 24 நாடுகள்): ப்ரதானி காமுண்ட (பிரதானி காமிண்டன் [கவுண்டன்] , ஆறுநாட்டார்)
|
|
இருபத்திநாலு நாடுகள்: ப்ரபு காமுண்ட (பிரபு காமிண்டன் [கவுண்டன்], ராஷ்ட்ரி, பெரியநாட்டார், பெரியஎஜமானர், பெரியகாராளர், பெரியபட்டக்காரர்)
|
|
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சமஸ்தானங்கள்: சம்ஸ்தான காமுண்ட (சமஸ்தான காமிண்டன் [கவுண்டன்], நாட்டார், சின்னஎஜமானர், காராளர், பட்டக்காரர்)
|
|
சமஸ்தானத்தில் காணி ஊர்கள்: காணி காமுண்ட (காணி காமிண்டன் [கவுண்டன்], காணியாள கவுண்டர்)
|
|
காணிக்குள் கிராமங்கள்: க்ராம காமுண்ட ( கிராம காமிண்டன் [கவுண்டன்] ஊர்கவுண்டர், ஊர்கொத்துகாரர்) – 
ஊர் காவல்: ஊர் சாம்புவன் (தலையாரி)
|
ஊர் : க்ராம மண்யகார (கிராம மணியகாரர், ஊர் மணியம்) -
ஊர் கணக்கர்: க்ராம கர்ணம் (கர்ணையம், கணக்குப்பிள்ளை) –
உதவியாளர்: க்ராம தண்டம் (தோட்டி, தலையாரி, தண்டல்காரர்)
|
|
கிராமத்துக்குள் கவுண்டர்கள்: காமுண்ட (காமுண்டன் [கவுண்டன்], பண்ணையக்காரன், பண்ணாடி)
இவருக்குக்கீழ் பண்ணையாட்கள்.


பார்க்க:

1. பூந்துறைநாடு:

1.     பூந்துறைநாடு:
பூந்துறைநாட்டின் காவேரிக்கு மேற்கில் உள்ளபகுதி மேல்கரை பூந்துறைநாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி கீழ்கரை பூந்துறைநாடு எனவும் வழங்கப்படுகிறது.

A. மேல்கரை பூந்துறை நாடு:
பவானிநொய்யல் இரண்டு படுகைகளுக்கும் இடைப்பட்ட minor river basins உடையதே மேல்கரை பூந்துறைநாடு. இன்னாடு மேலும் நான்கு சமஸ்தானப் பிரிவுகளாக உள்ளது.


மேல்கரை பூந்துறைநாடு ஊர்த்தொகை:

இன்றைய சர்க்காரின் பிரிவினை வேலையால் மேல்கரை பூந்துறைநாட்டின் ஒரு பகுதி ஈரோடு தாலுகாவிலும், மற்றொரு பகுதி பெருந்துறை தாலுகாவிலும் உள்ளது.


ஈரோடு தாலுகா பகுதி:
பெருந்துறை தாலுகா பகுதி:


http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178
 நண்ணாவுடையார் உலகுடையார்
(48)தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

a. முதலூர்அவல்பூந்துறை (பாரசீகம்: அவல் = முதல்பூந்துறை ராசாம்பாளையம் (தற்பொழுது காரூத்துப்பாளையம்)
b. வெள்ளோடுஉலகபுரம்
c. நசியனூர் - சாமிக்கவுண்டன்பாளையம்
d. எழுமாத்தூர்அவலூர் - “அவல்ஊர் (பாரசீகம்: அவல் = முதல்)
இந்நான்கு பெரியவீட்டாருக்கும் மேல்கரை பூந்துறை நாட்டின் தலைமை ஸ்தலமான சென்னிமலையில் மடங்களும் உரிமைகளும் உள்ளன.a. பூந்துறைநன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :


நண்ணாவுடையார் உலகுடையார்

தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் 
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் 
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் 
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.


 பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளது. அவல் பூந்துறைமுதல் பூந்துறை, துய்யம் பூந்துறைஇரண்டாம் பூந்துறை. இவ்வூரே கொங்கதேசத்தின் முதல் ஊராக வழங்கி வருகிறது. இவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்) ஆதிகாணியாகும். அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமே பூந்துறை பட்டக்காரரது ஊராகும். இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர். மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர் பசுபதீசருக்கு கலசம் வைப்பதும், அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும், இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரே. ஆதியானதும், பெரியதும், வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால் அளிக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகப் பாடல்களிலும், ஆவணங்களிலும், பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம். தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும், அபயம் அளித்தவருமான வம்சத்தவர். அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும் பிடுங்கிக்கொண்டனர். அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.
தற்போதைய பட்டக்காரர் வாரிசு: கொங்க 24 நாட்டு பெரியவீட்டுக்காரர், வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டார், பூந்துறை நாட்டு பெரிய வீட்டுக்காரர், பூந்துறை பெரியவீட்டார், அவல் பூந்துறை பெரியவீட்டார், காரூத்துப்பாளையம் பரம்பரை மணியகாரர் ஸ்ரீமான் குருசேவ் (எ) ஸ்ரீமான் வாரணவாசி நன்னாவுடையார் அவர்கள்.


b. வெள்ளோடு: உலகபுரம் பட்டக்காரர் உலகுடையார்

இவர் வெள்ளோடு சமஸ்தான பட்டக்காரர். பூந்துறை நாட்டுக்கு இரண்டாவது பட்டம். உலகுடையார் பற்றிய செய்திகள் கொங்கு மண்டல சதகம், பட்டயங்கள், ஆவணங்களில் ஏராளம் உள்ளன. தீரன் சின்னமலை தங்கை மக்கள். சின்னமலைக்காக உயிர் கொடுத்தவர்கள். தென்முகம் வெள்ளோடு உலகபுரம் கரை சாத்தாந்தை கோத்திரத்தார்


உலகுடை மன்றாடி - வெள்ளோடு

பூத்தந்த வானமும் சந்தன மாதும் புனலொழிந்து 
தேய்த்தந்த முன்கையிற் சந்தனம் வாரிச் சிவன் மெயினிற் 
சாத்தந்தை கோத்திர னுலகுடை யான்செய் தவம்பெருக 
வாய்த்தந்தக் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே

 இவரது அன்னையார் (சின்னமலை பேத்தி) மற்றும் உலகுடையாரது சகோதரர்கள். உலபுரத்திற்கு கடந்த தலைமுறை வரை ஓடாநிலையில் சின்னமலையின் வாரிசுகளோடே கொள்வினை கொடுப்பினைகள் நடந்து வந்தன. தற்போதைய பட்டம்: ஸ்ரீமான் கிருஷ்ணசாமி (எ) 
உலகுடைய மன்றாடி

 பட்டத்து இளவரசு: கதிர்வேல் (எ) ஸ்ரீமான் முத்திதிருமலை 

இளவரச குமாரர் குமாரஸ்ரீ திருமலை 


தற்போது உலகபுரம் பட்டக்காரர்


c. நசியனூர்: நசியனூர்  பட்டக்காரர் ராயர் 
சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக்கன்ன கோத்திரத்தார் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). நசியனூரில் சின்னமலை மறைவுக்குப் பின்னரும் போராடியதால் வெள்ளையர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டவர்கள்.தற்போதைய நசியனூர் பட்டக்காரர்: 
சுப்பிரமணியம் (எ) பொறப்பண  ராயர்
அரண்மனைக்காடு, 
சாமிக்கவுண்டன்பாளையம்

d. எழுமாத்தூர்:  நல்லகுமாருடையார் என்ற பட்டம், எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார் அவலூர் பட்டம் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). துரோகிகளால் அவலூர் அழிக்கப்பட்டு, தற்பொழுது வாரிசுகள் செட்டிபாளையம் (கவுந்தப்பாடி) – [காஞ்சிக்கோயில் செம்ப கோத்திர நாட்டாருக்கும், நசியனூர் மொடாக்கன்ன கோத்திர சமஸ்தானாதிபதி கவுண்டர்களுக்கும் மாப்பிளையாகச் சென்றவர்கள்], தொட்டிபாளையம் (பவானி),   எழுமாத்தூர் ஆத்திக்காட்டுவலசு, குன்னாங்காட்டுவலசு, காரைக்காட்டுவலசு, கொளிஞ்சிக்காட்டுவலசு, புதுப்பாளையம், கூட்டப்பள்ளி முதலான ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளையர் ஆதிக்கம் கொங்கத்தில் வராமலிருக்க பூந்துறை நாட்டார்களே தீரன் சின்னமலைக்குப் பக்கபலமாக இருந்தனர். இதனால் இன்று வெள்ளையர்கள் மறைமுக ஆட்சியிலும் அழித்தோழிக்கப்பட்டுள்ளனர்.

B. கீழ்கரை பூந்துறை நாடு: மோரூர் காங்கயர்
இன்னாட்டின் தலைமை மோரூராகும். நல்லபுள்ளி அம்மனை வழிபடும் மோரூர் கன்ன கோத்திரத்து காங்கயரே நாட்டார். இன்னாட்டினுக்குக் கீழ் இரண்டு சின்னப்பட்டங்கள். இதற்கடியில் சின்னப்பட்டம் முளசி கன்ன கோத்திரத்தார்.


கீழ்கரைப் பூந்துறை நாடு ஊர்த்தொகை:


சங்ககிரி தாலுகாவில் கீழ்கரை பூந்துறை நாட்டுப் பகுதி:

திருச்செங்கோடு தாலுகாவில் கீழ்கரை பூந்துறைநாட்டுப் பகுதி:

a. பருத்திப்பள்ளி இணை நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம்
அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்டார்


பருத்திப்பள்ளி நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

ராசிபுரம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

சேலம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப்பகுதி:

 
சங்ககிரி தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

b. ஏழூர் இணை நாடு: ஏழூர் பண்ணை கோத்திரத்து நாட்டாரே இரண்டாம் இணைப்பட்டம்.


ஏழூர் நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:
 நாமக்கல் தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி: