24 நாடுகள் - பட்டக்காரர்கள் பட்டியல்

Friday, March 11, 2011

5. ஆறை நாடு:


காஞ்சிநதியின் (நொய்யல்) வடக்கு நீர்பிடிப்புப்பகுதிகளே ஆறைநாடாகும். இதுவே கோயமுத்தூர் பீட பூமி (Coimbatore plateau) எனப்படுகிறது. சேரர் திருஞானசம்பந்தர் காலத்தில் (circa 600) காளத்திப் பூலுவரைக் பட்டமாக்கினர். 


சோழர் (950-1126 CE) பாலவெள்ளாளரை பூலுவரை வெல்லவைத்துப் பட்டமாக்கினர்.
 இந்நாட்டுக்கு ஆறு சமஸ்தான பட்டங்கள். அனைவரும் பால வெள்ளாள கவுண்டர்கள்.

பெரிய பட்டம் சேவூர் பட்டக்காரரான பால வெள்ளாள பயிசலிய (பைசல்ய) கோத்திரத்து  ஆறு நாட்டார்  வணங்காமுடி இம்முடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டாகவுண்டன் வம்சத்தார், சேவூர் சிந்தாமணிபாளையம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கடிதம் கைபீது எழுதியும் இவர்களது இளைய வம்சமான குமார சோழியாண்டானுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.









ஆறு நாட்டார்  வணங்காமுடி இம்முடி வீரவிக்கிரம கரிகால சோழியாண்டாகவுண்டன்
இளவரசு 

சின்ன பட்டங்கள் 

  1. வடபரிசார நாடுஅவினாசி பட்டம்: செம்பியன் கிழானாடி நல்லூர் (சேவூர்) ஆறு நாட்டார்  வணங்காமுடி இம்முடி வீரவிக்கிரம கரிகால சோழியாண்டாகவுண்டன். ராஜராஜன் சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் செம்பியன் மாதேவியாவார். http://en.wikipedia.org/wiki/Sembiyan_Mahadevi


சேவூரில் செம்பியன் மாதேவி சமாதி - செம்பியன் விநாயகர் கோயில் 





சோழர்கோன்
அம்புவிச் சோழநள் ளாறும் வருமயி ராவதமும் 
பண்புறு மைந்திகழ் வில்வமுஞ் சேர்வனம் பைதலக்கோன் 
செம்பியன் காணவிநாசியி லிங்கர்தன் சேர்வை பட்டம் 
வம்புறு கண்டனாஞ் சோழர்கோன் வாழ்கொங்கு மண்டலமே.
     (கு - ரை) பைதலக்கோன் - பால வெள்ளாளரில் பைதலை குலத்துத் தலைவன். அவிநாசிக் கோவில் திருப்பணி செய்தவன். இவனைப் பற்றிய கல்வெட்டுகள் அவிநாசிக் கோவிலில் உள்ளன. 
மேலும் விவரங்களுக்கு : http://kongucholar.blogspot.in/ 


முதலாம் சேவூர் போர் - கி.பி.953


                            மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டியர்களுக்கு தங்கள் பாண்டிய அரசுக்கு ஒரு இரண்டாம் தலைநகரம்வேண்டும் என்ற அவா எழுந்ததுஅத்துடன் இரண்டாம் தலைநகர் இருக்கும் இடம் மிகவும் வளம் மிக்க பகுதியாக இருக்க வேண்டும்என்பதையும் கருத்தில் கொண்டனர்பாண்டியர்களின் எண்ணங்கள் முழுவதும் கொங்கு நாட்டின் மேல் இருந்த காரணத்தினால்அவர்களின்இரண்டாம் தலைநகரம் கொங்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர்இதன் காரணமாக மூன்றாம் ராஜா சிம்மபாண்டியனின் மகன் வீர பாண்டியன் கி.பி 953-ல் சோழர்யுடன் சேவூரில் போர் தொடுத்தான்இதுவே முதலாம் சேவூர் போர் ஆகும்.இப்போரில் வெற்றி பெற்ற பாண்டியன் " தான் ஒரு சோழனை கொன்றதாகவும்அச்சோழனின் தலையை போர்களத்தில் கால் பந்தாக வைத்துஉருட்டி விளையாடியதாகவும்பெருமை கொண்டான். "சோழன் தலைக் கொண்ட வீர பாண்டியன்என்ற விருது பெயரும் சூட்டி கொண்டான்என்றும் திருநெல்வேலி கல்வெட்டுகள் கூறுகின்றனஇங்கே சோழன் பெயர் விவரம் இல்லாமல் கூறியதால் அது ஒரு சோழ அரசனாகஇருக்க முடியாது என்றும்அவன் கொங்கு சோழர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அசிரியர்கள் கருதுகின்றனர்.வீர பாண்டியன் சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்தா காரணத்தினால் இந்த ஊரின்பெயரை சேவூர் என்று மாற்றினான்அத்துடன் தன் தலைநகரான மதுரையில் இருக்கும் அழகர் பெருமாளை தனது இரண்டாம் தலைநகர்என்று எண்ணிய சேவூரிலும் எழுந்தருள செய்து  திருகொவிலையும் கட்டி முடித்தான்அழகர் பெருமாள் கோவில் சேவூர் காவல் நிலையம்அருகில் உள்ளது.




இரண்டாம் சேவூர் போர் - கி.பி. 962

                    இதுவே முதன் முதலாக இலங்கை சிங்களருக்கு எதிரான போருக்கு வித்திட்டதாகும். "சோழன் முடித்தலை கொண்டவன்என்றுபெருமையடித்துக்கொண்ட வீரபாண்டியனை விழ்த்தி பாண்டிய நாட்டை கைப்பற்ற சுந்தர சோழன் பேரவாக் கொண்டான்முன் பாண்டியன்வெற்றி கண்ட அதே களத்திலேயே சோழன் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர் போர் என்கிறோம்இது சுந்தர சோழனின் ஐந்தாம்ஆட்சி ஆண்டில் கி.பி.962 நடைபெற்றதாகவும்இப்போர் சோழர்களை இலங்கைப்படை எழுச்சிக்கு துண்டிற்றுஅதாவது இலங்கை சிங்களஅரசன் நான்காம் மயிந்தன்(மகேந்திரசேவூர் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய சிங்கள படையை அனுப்பியிருந்தான்இதன்காரணமாக சிங்களருக்கு எதிராக சோழர்கள் இலங்கை மீது  தொடுத்த போரே முதலாம் இலங்கை போராகும்இரண்டாம் சேவூர் போரில்பாண்டியன் தோல்வி அடைந்து சோழர் பெரும் வெற்றி பெற்றனர்பாண்டிய நாடும் சோழர்களின் கைபட்டதுஇதன் பின்  கி.பி  -966 நடத்தபோரில் வீர பாண்டியன் கொள்ளப்பட்டன்முன் அவன் சோழர் தலையை வெட்டியதாக விருது கூறியது போல இப்பொது அவன் தலையைவெட்டி சோழர் விருது பட்டம் பூண்டனர். " வீரபாண்டியன் முடித்தலை கொண்ட கொப்பர கேசரிவர்மன்என்று பட்டம் பூண்டனார்சோழர்கள்வெற்றி பெறாமல் இருந்துருந்தால் சிங்களர்கள் தமிழகத்திலும் குடியேறி உரிமை கொண்டாடியிருப்பார்கள்.



1. பேரூர் நாடு: பேரூர் பட்டம்

2. கோவங்க நாடு: கோவனூர் பட்டம்

3. மன்னி நாடு: அன்னூர் பட்டம்

4. கவைய நாடு: கோயில்பாளையம் (சாமக்குளம்) பட்டம் - சாமபுள்ளந்தி கோத்திரத்து இம்முடி மசக்காளி மன்றாடியார். இன்றும் இவரது வம்சாவளியினர் கோவை மருதமலை சாலையில் வடவள்ளியில் உள்ளனர்.  

இம்முடி மசக்காளி மன்றாடி

நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை 
யெல்லாஞ் சொலிநிலை நில்லாமற் பல்லக் கிரவை பற்றிச் 
சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி 
வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டுள்ள சர்க்கார் சாமக்குளம் = கோயிற்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப்போரில் நிற்கவில்லையென்று பல்லக்குஞ் சன்மானப் பொருள்களையும் பற்றிக்கொண்டு, மற்றை உள்ளவற்றை மூட்டை கட்டிப் படிக்காசுப் புலவர் சுமந்து நடந்து போகும்படி ஊரைவிட்டகற்றிய கவிசொல்லுந் திறமுடைய 
வருங்கொங்கு மண்டலம் என்பதாம். வரலாறு :- படிக்காசுப் புலவர், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாகவிருந்து பின் தலயாத்திரையாகக் கொங்கு புகுந்தார். கவசை ஆறை நாட்டுள் (சர்க்கார் சாமக்குளம், கோயிற்பாளையம் யென்னும்) *கவசை நகரிற் கல்வி கேள்விகளிலும் வள்ளன்மையிலுஞ் சிறந்த மசக்காளி மன்றாடி என்பவன் புகழொடு வாழ்ந்தான். அவன் சமூகத்திற் றமிழ்ப்புலவர்சபை ஒன்று கூடிற்று. அதில் வண்ணப்பாக்கள் சொல்வது என்ற வாதம் நடந்தது. அதில் படிக்காசுப்புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை, முன்பேசித் தொடங்கிய சொற்படி கொங்குப் புலவர் பற்றிக்கொண்டனர். 

இவன் இம்முடிப் பட்டம் பெற்றவன் என்பதை அடியிற்கண்ட 
செய்யுள் வலியுறுத்துகின்றது.

"முன்னா ளுறைந்தைவரு மரசர்பெரு மானுலகில் முடிமன்னரிட தம்பிரான் 
முதுமொழி குலோத்துங்க சோழனருள் செய்தனன் முத்தமிழ்க் கம்பநாடன் 
அந்நாளி லேபொன்னி கரைகள்கட வாதுள் ளடங்கவிசை பாடலுக்கா 
ஆதித்த னுள்ளளவு மழியாத வதுவைவரி யளித்தனர்க ளன்றுமுதலாப் 
பன்னாத நிலைமைசெறி கொங்குநாட் டினின் மேவு படிகார வித்வச்சனர் 
பங்கென நடந்துவரு படிதனக் கிடரதாய்ப் படித்தசிலர் கைக்கொண்டதை 
இந்நாளி லேகீர்த்தி நிலையாக விடுவித்தவ் வியல்வாண ருக்களித்தான் 
இங்கிதம தாகவரு கவசைநகர் வாழ்வுற்ற இம்முடி மசக்காளியே"

(தனிப்பாடல்)

5. பழன நாடு: பெரும்பழனூர் (பெருமாநல்லூர்) பட்டம்: மட்டார் குளலாள் மதரூபன் பட்டாபிஷேக பெருமாள் மன்றாடியார்.



ஆறைநாடு ஊர்த்தொகை:

கோயமுத்தூர் வடக்கு தாலுகாவில் ஆறைநாடு:


கோயமுத்தூர் தெற்கு தாலுகாவில் ஆறைநாடு:



கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் ஆறை நாடு:

அவினாசி தாலுகாவில் ஆறை நாடு:

சூலூர் தாலுகவில் ஆறைநாடு:

திருப்பூர் தாலுகாவில் ஆறைநாடு:

7 comments:

  1. எங்கள் பால வெள்ளாள கவுண்டர் சாதி மற்றும் ஆறை நாட்டின் வரலாற்றினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  2. first i say thank because i find out about our dynasty, and i have more details about our dynasty. i prepare a book about our dynasty i has taken a picture from your site for my new book.
    thanks & Regards
    siva prakash

    +91-9894095632/9790642114

    ReplyDelete